வண்டலூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம்.... அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

வண்டலூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம்.... அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்


 வண்டலூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம். அமைச்சர், எம்எல்ஏ மற்றும் கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளியில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி காலை உணவு திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர்,எம்எல்ஏ, கலெக்டர், சேர்மன் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டனர். இதனை அடுத்து மாணவர்களுக்கு இலவசமாக காலனி, கிரையான்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினர். 

இதில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், வண்டலூர் துணை தலைவர் கவிதாசத்யநாராயணன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்திக், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.எஸ்.ரவி, குணசேகரன், பத்மநாபன், ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜெகன் தேவேந்திரன் ரத்தினமங்கலம் முனுசாமி, மண்ணிவாக்கம் எம்.எஸ்.கார்த்திக், ஜேவியஸ்.சதிஷ், ஆர்.ஜி.ராஜ், வண்டலூர் இளைஞர் அணி செயலாளர் ராஜ் என்கிற பிரகதிஷ், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment