அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிக்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் இலவச கல்வி ஆணை வழங்கப்பட்டது
அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம் சார்பில் கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு கல்வி சேவையை செய்து வருகின்றனர். அந்த வகையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு தரப்பினர்களுக்கு தொடர்ந்து இலவச கல்வி ஆண்டு தோரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் தொடர்ந்து மேற்படிப்பு படிக்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் முதல்பட்டதாரியாக உள்ள அந்த மாணவியில் கல்வி தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று அன்னை வேளான் வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவியின் மூன்று ஆண்டுகள் கல்வி செலவு ஏற்கப்பட்டது.
அதன்படி அன்னை வேளங்கண்ணி கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிக்கு 3 ஆண்டுகளும் கட்டனமின்றி படிக்கும் ஆணையை வழங்கி மாணவியை பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி செயலாளர் தேவ் ஆனந்த் கூறுகையில், இது போன்ற ஏராளமான மாணவர்களுக்கு ஆண்டு தோறும் உதவி செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த மாணவிக்கும் 3 ஆண்டுகளும் ஒரு ரூபாய் கூட கல்வி கட்டணமின்றி BCom வணிகவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments