• Breaking News

    தாம்பரம்: நடைபாதை கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைப்பு..... அதிமுக மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் நிதி உதவி


    தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் தெருவுக்கு வந்த நடைபாதை வியாபாரிகள் நடை பாதை கடை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெட்டி கடைகளை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அமைச்சர் தாமோ அன்பரசன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பெயர் பலகைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர் குறிப்பாக நடைபாதை கடைகளை ஈவு இரக்கமின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் கடை உரிமையாளர் முன்னிலையில் பெட்டி கடைகளை சுக்கு நூறாக உடைத்து தள்ளினர்.

     கடைகளில் பொருட்கள் இருந்து போது அதனை எடுக்க விடமால் அப்பளம் போல நொறுக்கினர் சானோடோரியம் சித்தா மருத்துவ மணையின் நுழைவாயில் இருந்த தள்ளு வண்டி  ஜூஸ் கடையை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி மூலம் நொறுக்கினர்.

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த இரண்டு பெட்டி கடைகளை உடைத்து அகற்றினர். ஒரே நாளில் பல நடைபாதை கடை வியாபாரிகள் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக வேதனை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கும் நெடுஞ்சாலை துறையினர்  குரோம்பேட்டையில் செயல்படும்  முக்கிய வணிக வளாகங்கள் மற்றும் உணவகத்திற்கு பார்க்கிங் வசதி இல்லாமல் சாலையிலே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

    அதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதை அறிந்த அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தள்ளுவண்டி வியாபாரிகளை நேரில் அழைத்து நடந்ததை  கேட்டறிந்தார்.

     பின்னர் வாழ்வாதாரம் தவித்த தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிதி உதவி தலா பத்தாயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கு வழங்கினார்.உடன் மத்திய பகுதி கழக செயலாளர் எல்லா செழியன், செம்பாகம் பகுதி கழகச் செயலாளர் இரா.மோகன் முன்னிலையில் வழங்கினார்.

    No comments