மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை


 மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஆவார். இவர் மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக இருந்துள்ளார். இவர் இன்று அதிகாலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாலசுப்ரமணியனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை அமைச்சர் பிடிஆர் வீட்டின் அருகே நடந்துள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment