• Breaking News

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சத்திரிய பாசறை மற்றும் காமராஜர் நேதாஜி சமூக நல அறக்கட்டளை சார்பில் காவல்துறை,மருத்துவ துறை, தூய்மைபணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்


    காமராஜர் நேதாஜி மற்றும் சத்திரிய பாசறை நிறுவன தலைவர் ஆதித்யா சம்பத்குமார் அவர்களின் தலைமையில் சத்திரிய பாசறையின் பொதுச் செயலாளர் ஆர்.பார்த்திபன், பொருளாளர் பாண்டியராஜன், காமராஜர் நேதாஜி சமுகநல அறக்கட்டளை கௌரவ ஆலோசகரரும் மணிமங்கலம் காவல்நிலைய ஏழுத்தருமான முதன்மை பெண்காவலருமான டி.சங்கீதா, காமராஜர் நேதாஜி சமூகநல அறக்கட்டளையின் பொருளாளர் கார்த்திக் செல்வன், நேதாஜி சமூக நல அறக்கட்டளையின் வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் மூர்த்தி குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அன்னை வேளாங்கண்ணி குழுமத்தின் துணைத் தலைவர் தேவ் ஆனந்த், ஆயுத பாதுகாப்புபடை ஆய்வாளர் மணிமாறன், தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனையின் RMO மருத்துவர் திருமதி ராதிகா, குரோம்பேட்டை காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி சசிகலா, சென்னை மண்டல திமுக வர்த்தக பிரிவின் செயலாளர் செந்தில், தாம்பரம் மாநகர குரோம்பேட்டை உதவி ஆய்வாளர் அற்புதம், உதவி ஆய்வாளர் கென்னடி சேவியர் ஊர்க்காவல் படையின்தளபதி திருமதி நிர்மலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் காவல் துறையின் சட்ட ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் முதன்மை காவலர்கள் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்   இதில் ஏராளமான காவல்துறையினர் சத்திரிய பாசறை மற்றும் காமராஜர் நேதாஜி சமூக நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments