தாம்பரம்: கன்னடபாளையம் சத்துணவு மைத்தை மண்டல தலைவர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் 52வது வார்டு கன்னடபாளையம் சத்துணவு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக வயிற்றுப்போக்கு தடுப்பு, மற்றும் வைட்டமின் (A) குறைபாடு முகாமினை 4வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டது. இம்முகாமில் மாமன்ற உறுப்பினர் எல்.பெரியநாயகம் வட்ட செயலாளர் மு.விஜயன், வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மருத்துத் துறையினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments