• Breaking News

    செங்கல்பட்டு: மண்ணிவாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கெஜலட்சுமி சண்முகம் மற்றும் துணைத் தலைவர் சுமதி லோகநாதன் அவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

     மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கன்வாடி ஊழியர்கள் சிற்றுண்டி வழங்கும் பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர் இந்த கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார் அனைத்தும் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர்  எஸ்.கெஜலட்சுமி சண்முகம் உறுதியளித்தார்.

     உடன் இருந்த காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் வி.சோமசுந்தரம் மற்றும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர் அமுதாரங்காநாதன், பூவழகிநித்திய செல்வராஜ், உஷா பிரபு, பூசாதேவி புன்னியகோட்டி, சுரேஷ், லட்சுமி நாகராஜ் குமார், பத்மாதெய்வசிகாமணி மல்லிகாபார்த்திபன், சேகர், பச்சையம்மாள்அண்ணாதுரை மற்றும் ஊராட்சி செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments