ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் வேளாண்துறையைச் சீரழித்து 40 கோடி விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக நசுக்கியது. வேளாண்குடி மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, நவீன் தாராளமள கொள்ளைகைகளை தாறுமாறாக செயல்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் மொத்த சொத்தையும் பங்கு வைத்து வருகிறது. விவசாய கூலித்தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்டவர்களின் நலன்களை நிறைவேற்றும் வகையில் 2024 - 25 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில் ஏதும் இல்லை. மக்களை துயரத்தில் தள்ளும் மோடி அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டத்திற்கு குறைந்த பட்சம் 2 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600/- ஆகவும் உயர்த்திட வேண்டும். வேலையை அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் முழுவேலை - ஊதியம் வழங்கிட வேண்டும்.
60 வயதைக் கடந்த முதியோர் அனைவருக்கும் ரூ.5000/- ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். இதர சமூக பாதுாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும்.
பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் போதுமான உணவு தானியங்களை விநியோகம் செய்திட வேண்டும்.
வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டை ரூ.6 இலட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிக்கல் கடை தெருவில் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாகை தெற்கு ஒன்றிய தலைவர் ராதா, செயலாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய ராஜாராமன், செயலாளர் மார்க்ஸ், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments:
Post a Comment