தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி மாவட்ட பார்வேர்ட் பிளாக் கட்சி செயலாளர் முருகன் தலைமையிலும், கம்பம் நகரச் செயலாளர் அறிவழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையிலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும்,கள்ளர் பள்ளியை அரசு பள்ளியுடன் இணைக்க கூடாது எனவும், பனை மற்றும் தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் கள்ளு இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கம்பம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாகமாற்றிட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

0 Comments