• Breaking News

    மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

     

    தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக சிறந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு கடந்த மாதம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments