• Breaking News

    தாம்பரம் முடிச்சூர் பகுதியில் விடியல் தெற்கு லட்சுமி நகர் பொது நல சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா


    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் கிராமத்தில்,  தெற்கு லட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் துவக்கப்பட்டு சங்கத்தின் முதல் சுதந்திர தின விழா, முடிச்சூர் அனைத்து குடியிருப்பு நல சங்க செயலாளர் பா.தவமணி அவர்களின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த குடியேற்ற நிகழ்ச்சியில் விடியல் சங்கத்தின் தலைவர் கற்பகம் சீனிவாசன் அவர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

     இந்த விழாவில் விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் கற்பகம் சீனிவாசன். துணைத் தலைவர் பிரியா,செயலாளர் முகமது அம்ரு, துணை செயலாளர் பானுமதி, பொருளாளர் திலகவதி, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இளைஞர் அணி செயலாளர் கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், விஜய கணேசன், சையது அபுபக்கர், நாகஜோதி, நாககஸ்தூரி, புவனேஸ்வரி, கீர்த்திகா தேவி, செல்வி, ஜெயந்தி, சிவசக்தி, புவனேஸ்வரி அம்மாள், முகமது அப்சர், நித்யா சுவாமிநாதன், பாத்திமா, அனீஸ் பாத்திமா மற்றும் தெற்கு லட்சுமி நகர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    No comments