மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் 19-வது புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 185- வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு காட்சி தகவல் தொடர்பியல் துறை சார்பில் 19-வது புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார். இதில் இந்திய கலாச்சாரம், மனிதனின் உணர்வுகளை வெளிக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் சுதந்திரத்தின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலான பாரம்பரியத்தை பறைசாற்றும் புகைப்படங்கள், இயற்கையின் அதிசயங்களை கண்டு வியக்கும் வகையிலான காட்சிகள் என பலதரப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டியிருந்தது.
இதில் முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர்.ஜி. ரவிசெல்வம் ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் செந்தில்முருகன், ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் வளவன் மற்றும் முதல்வர் கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காட்சி தகவல் தொடர்பியல் துறை தலைவர் டாக்டர் சங்கர் தலைமையிலான பேராசிரியர்கள் ஆசிரியர் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
No comments