அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் இரண்டு நாட்களாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிக்கு காவல் தெய்வமாக உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி திருவிழாவின் போது 2 நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இவ்வாண்டு ஆடி திருவிழாவிற்காக கடந்த 12-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையடுத்து 23-ந் தேதி கோவிலில் காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் மண்டகடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.9 மற்றும் 10ம் நாள் திருவிழாவாக இறந்து நாள் தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர். இதில் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 20-ந் தேதி வரையில் ஆடிபெருந்திருவிழா நடைபெறுகிறது.
No comments:
Post a Comment