தேனி: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தடை


தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது .

இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் 3 ஆம் நாளாக தடை விதித்து உள்ளனர்.அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments