பெரி கல்லூரியில் நடைப்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 400 மாணவர்கள் பங்கேற்பு
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி (PERI) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருமால் செஸ் அகடாமி மற்றும் பெரி கல்லூரி இணைந்து 28வது ஆண்டு மாநில அளவிலான செஸ் போட்டி வெகு சிறப்பாக நடைப்பெற்றது.இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியாக 7 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 10 இடங்கள் பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பெரி கல்வி குழும தலைவர் சரவணன் பெரியசாமி, தலைமை நிர்வாக அலுவலர் சசி வீரராஜன், கல்லூரி முதல்வர் அ.புருசோத்தமன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
மாணவர்களிடம் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் இத்தகையை போட்டிகள் நடத்தப்பட்டதாக பெரி கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments