தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment