• Breaking News

    தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 5 பகுதியில் பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் துவங்கி வைத்தார்


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் முதல் முறையாக மண்டலம் 5 பகுதியில் அம்ருத்மித்ரா என்ற திட்டத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களைக் கொண்டு பூங்காக்களை இயக்கி பராமரிப்புக்கும் பணிகளை 5 மண்டல குழு தலைவர் எஸ் இந்திரன் துவங்கி வைத்தார்.

    இன்று முதல் வானவில் மகளிர் சுய உதவிகுழுவினர்  மற்றும் ஜெயம் மகளிர் சுய உதவி குழுவினர் வார்டு என் 47ல் ஆண்டாள் பூங்கா, வார்டு 48ல் காந்தி பூங்கா,வார்டு 62ல் பாலாஜி நகர் பூங்கா, வார்டு 64ல் சுப்புராயன் பூங்காக்களை இவ்விரண்டு குழுக்களுக்கு பூங்காவை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆணைவழங்கியதை அடுத்து இன்று காலை தாம்பரம் மாநகராட்சி 5 வது மண்டல குழு தலைவர் எஸ் இந்திரன் கிழக்கு தாம்பரம் காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யபட்டிருந்த துவக்கவிழாவில் கலந்துக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழௌக்களுக்கு இயக்குதல் மற்றும் மராமரிப்பு பணி ஆணைகளை வழங்கி பணிகளை துவக்கிவைத்தார்.

    இதனையடுத்து பூங்கா பராமரிப்பு பணிகளை ஆர்வத்துடன் மேற்க்கொண்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி 5 மண்டல உதவி ஆணையாளர் வசந்தி,சுகாதார அலுவலர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் சசிகலாகார்திக்,சகிலா,மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த  பெண்கள் என ஏராலமானோர் பங்கு பெற்றனர்.

    No comments