படூர் முதல்நிலை ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கவுள்ள சாலை பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் கே.ஏ.எஸ்.தாராசுதாகர் துவங்கிவைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் நேற்று 05வார்டில் மூன்று சாலைகளுக்கு புதியசாலைகள் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் கெளதம் அனைவரையும் வரவேற்றார் . துணைத்தலைவர் வனிதாசேட்டு , படூர் ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தினிபஞ்சாட்சரம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள் . சிறப்பு அழைப்பாளராக திமுக கட்சியினரும் படூர் ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஏ.எஸ்.தாராசுதாகர் கலந்துகொண்டு முதலவதாக வண்டலூர் செல்லும் பிரதான சாலை அருகே உள்ள ராஜன் சாலை தெருவில் எல்பிஏ திட்டத்தின்கீழ் ரூபாய் . 16இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடத்தி பணிகளை துவங்கிவைத்து பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஓஎம்ஆர் சாலை அருகே அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ள முக்கிய பிரதானசாலையாக அமைந்துள்ள பாரதியார் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் புதியதார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நிகழ்வை நடத்தி பணிகளை துவங்கிவைத்தார் . இறுதியாக எல்பிஏ அலகு 2 திட்டத்தின்கீழ் ரூ. 10இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்வை நடத்தி பணிகளை துவங்கிவைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்களான முகமதுகபீர்கான் , உமாமகேஸ்வரி ரமேஷ் , ரேகாசேகர், மோகன்,மலர்செல்வம், ஜெயந்திதசரதன் , சுரேஷ் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் படூர் கே . ஏ.எஸ் .சுதாகர் , கட்சியினர்கள் பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ,ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்கள். இதுகுறித்து நிர்வாகம் சார்பில் கூறுகையில் மேற்கண்ட மூன்று சாலைகளுமே போடப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக ஆகிறது. அதுவும் பாரதி தெரு பிரதான சாலை படூரின் மிகமுக்கியமான பிரதான சாலையாகும் இச்சாலை போடப்பபடாததால் பெரும் சிரமமாக பொதுமக்களுக்கும் வாகஓட்டிகளுக்கும் இருந்துவந்தது . இதற்கான நிரந்தரதீர்வு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.
படூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் பலஆண்டுகளாக போடப்படாத போடமுடியாத சாலைகள் தலைவர் தாராசுதாகர் கடும் முயற்சியால் போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 80%சாலைப்பணிகள் நிறைவுற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஊராட்சி மன்றம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. வந்திருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலர் நித்தியானந்தம் நன்றி தெரிவித்தார்.
No comments