செங்குன்றம் காவல் சரகம் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணிவது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது


ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி மேற்பார்வையில் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் ஆவடி ஆணையரகம் செங்குன்றம் காவல் சரகத்திற்குட்பட்ட மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் போக்குவரத்து காவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 வடசென்னை அனன் நிலைய பகுதியில் இருந்தும் ,சென்னை மணலி வழியாகவும் ,பொன்னிரியில் இருந்து மீஞ்சூர் வழியாகவும் செல்லும் வாகனங்களை நிறுத்தி தலை கவசம் அணியாதவர்களுக்கு விபத்து குறித்தும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் கார் மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்த மீஞ்சூர் காவல் துறை  சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.

Post a Comment

0 Comments