ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி - பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் பேட்டி


செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு, மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெறுகிறது.இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம், மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் கூறுகையில் :

தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் அரசாங்கத்திற்கும், அரசுக்கு கிடையாது, அந்த அரசாங்கத்தில் இருக்கின்றவர்களுக்கு, அந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு அவர்களது குடும்பங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

இது தவிர்க்கப்பட வேண்டும், இதை ஒன்றை தவிர்த்தாலே தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும், மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதபடி ஆட்சி நடத்த முடியும்.

இந்த அரசு கமிஷன் வாங்குவது, லஞ்சம் வாங்குவது, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது இதையெல்லாம் நிறுத்தினாலே போதும்.

பட்ஜெட் கூட்டத்தில் திருக்குறளை சொல்லி இருக்கலாம், தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு திட்டத்தை சொல்லி இருக்கலாம் என விருப்பப்படுவது வேறு, தமிழ்நாட்டைப் போல் ஒரு, ஒரு மாநிலங்களிலும் ஒவ்வொன்று உள்ளது.அவர்கள் எல்லோரும் அது போல தான் ஆசைப்படுவார்கள், கடந்த பட்ஜெட் கூட்டத்தில் திருக்குறளை சொன்னார்கள் என்றால் இந்த பட்ஜெட் கூட்டத்திலும் திருக்குறள் சொல்ல வேண்டும் என்று இல்லை.

திருக்குறளை பிரதமர் உலகம் முழுவதும் பேசுகிறார், இந்தியாவில் உள்ள அனைவரையும் படிக்க சொல்லுகிறார், பிரதமர் நரேந்திர மோடியை தவிர திருக்குறளை இந்திய அளவில், உலக அளவில் கொண்டு போனவர்கள் யாருமே கிடையாது.

காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து ஆட்சியில் இருந்தபோது திருக்குறளை சொல்லியா பட்ஜெட் தாக்கல் செய்தார்கள்.திமுக கூட்டணியில் நிதி அமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.சிதம்பரம் இருந்தபோது திருக்குறளை சொல்லிவிட்டார் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். இல்லையே, ஒருமுறை திருக்குறள் சொல்லவில்லை என்றால் அது ஒரு குற்றச்சாட்டா, அதுபோல தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லவில்லை என சொல்லுகிறார்கள்.

பிஜேபி ஆளுகின்ற மாநிலங்கள் முழுவதுமாக வாக்களித்த மக்கள் இருக்கின்ற மாநிலத்தை கூட நாங்கள் சொல்லவில்லையே.எல்லாம் மாநிலத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் பட்ஜெட் கூட்டுத் தொடரில் இல்லை.மக்களிடம் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள், தமிழ்நாட்டு மக்களை ஏமாளிகளாக திராவிட முன்னேற்ற கழகம் நினைக்கின்றது.

தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, 80 லட்சம் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு அளித்துள்ளார்கள் என்பதை பார்த்து திமுகவால் பொறுத்துக் கொள்ள, முடியவில்லை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதனால் தமிழ்நாடு மக்களிடம் பிஜேபிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஒரு கட்சி என்பது போல் ஒரு பெயரைக் கொண்டு போக வேண்டும் என நினைக்கிறார்கள்.அதற்கு நாங்கள் நிச்சயமாக விட மாட்டோம், இன்றைக்கு இருக்கக்கூடிய எங்களது மாநில தலைவர் உடனுக்குடன் பதில் சொல்லக்கூடியவர்.

நாங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்பவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் எங்கள் உயிர் போவதை பற்றி கூட கவலைப்பட மாட்டோம் கடுமையாக முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments