காஞ்சிபுரம்: காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் மண்ணிவாக்கத்தில் உறுப்பினர் சேர்க்க முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, August 25, 2024

காஞ்சிபுரம்: காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் மண்ணிவாக்கத்தில் உறுப்பினர் சேர்க்க முகாம் நடைபெற்றது


மண்ணிவாக்கத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம் எஸ் கார்த்திக் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், மாவட்ட கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மா.கணேஷ் பாபு  கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன் அவர்கள் ஏற்பாட்டில் புதுநகர் பகுதியில் வீடு வீடாக சென்று இல்லதேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதய கருணாகரன், துணை பெருந்தலைவர் ஏவிஎம் இளங்கோவன், ஓட்டேரி குணா, ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம், ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெகன் தேவேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜன் ஆறுமுகம், கிளைக் கழக செயலாளர்கள், இளைஞர் அணிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment