அண்ணாமலை லண்டன் செல்லும் தேதி குறிச்சாச்சு..... தலைவர் பதவி மாற்றமா....? - MAKKAL NERAM

Breaking

Thursday, August 15, 2024

அண்ணாமலை லண்டன் செல்லும் தேதி குறிச்சாச்சு..... தலைவர் பதவி மாற்றமா....?

 

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதம் வரை தங்கியிருந்து படிக்க இருக்கிறார். இந்நிலையில் அண்ணாமலை லண்டன் சென்றால் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அது தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது வருகின்ற 28ஆம் தேதி அண்ணாமலை லண்டன் செல்ல இருக்கிறார். அதன் பிறகு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் சர்வதேச படிப்பை தொடங்கும் நிலையில் அங்கு 3 மாதங்கள் வரை தங்கி இருப்பார். அவர் அங்கிருந்தபடியே கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார். வருகின்ற சட்ட மன்ற தேர்தலிலும் அண்ணாமலை தான் தமிழக பாஜக கட்சியின் தலைவர். மேலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் அதுவரை கட்சியை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் அண்ணாமலையுடன் கான்பிரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment