பொன்னேரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பிஜேபி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

பொன்னேரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பிஜேபி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி மாதம் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பிஜேபி சார்பில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜினி தலைமையில் தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில்  பாரம்பரிய கருப்பு கவுனி அரிசி அன்னதானம் நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி  பத்மநாபன் கலந்து கொண்டு  பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பிஜேபி நிர்வாகிகள்  வருண்காந்தி,சீனிவாசன், அப்புன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர் முன்னதாக சுகர் நோயிலிருந்து  முழுமையாக  விடுபட கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் குறித்து பக்தர்களிடையே  எடுத்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment