மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. தனிமையான இடத்துக்கு கொண்டு சென்று பத்திரமாக நிறுத்தினார் விமானி.
குண்டு மிரட்டல் தகவல் பரவியதும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கமாண்டோ படையினர், வெடிகுண்டு கண்டறியும் படையினர், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 135 பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment