சென்னை: திரைப்பட பாணியில் கைதிகளை கொடூரமாக தாக்கும் போலீசார்.... வெளியான அதிர்ச்சி வீடியோ....
சென்னையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது விசாரணை பட பாணியில் கைதிகளை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்துச் சென்ற போலீசு அதிகாரி அவர்களை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு இளைஞர்களை பெரிய கட்டையால் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாக அடிக்கின்றார். அது மட்டுமல்லாமல் அந்த இளைஞர்களை ஆபாச வார்த்தைகளாலும் திட்டுகின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
No comments