• Breaking News

    அறந்தாங்கி அருகே கனமழையால் துப்புரவு பணியாளர் வீட்டில் விழுந்த மரம்..... கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை...... களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் கருணாகரன்


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கலக்குடி பகுதியில் துப்புரவு பணியாளர்கள்  வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் நேற்று முன் தினம் பெய்த கனமழையால் வீட்டின் அருகே உள்ள ராட்சத மரம் ஒன்று வீட்டில் மேல் சாய்ந்து உள்ளது.சுதாரித்துக் கொண்ட வீட்டின் உரிமையாளர் தங்கராஜ் என்பவர் குழந்தை மற்றும் மனைவி வீட்டின் வெளியே சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து இந்த இடம் பொதுப்பணித்துறைக்குசொந்தமான இடம் என்பதால்   PWD - அதிகாரிடம் கூறி  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.இந்த நிலையில்  மாலை நேரமாகியும் PWD அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அறிந்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான  7 - பேர் கொண்ட காவலர்கள் எந்த ஒரு தயக்கம் இன்றி அருகே உள்ள வீட்டில் மரம் வெட்டும் ஆயுதங்களை வாங்கி காவல் ஆய்வாளர் மற்றும்  காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள்  மரத்தை வெட்டி அப்புறப்படுத்தத் தொடங்கினர்.

    அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சேதமடைந்த வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து இருந்தால் அதற்கு உண்டான செலவை நான் செய்கிறேன் அவர்களிடம் பணம் வாங்க வேண்டாம் என மின்சாரத் துறையினரிடம் காவல் ஆய்வாளர் கருணாகரன் கூறினார்.இதை பார்த்த வீட்டின் உரிமையாளரான தங்கராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்ணீருடன் காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.

    எத்தனையோ காவலர்கள் பொதுமக்கள் கொடுக்கக்கூடிய மனுக்களை வாங்கி அலட்சியமாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்களுக்கு ஒரு சிறிய பிரச்சனை என்றால் எந்த ஒரு தயக்கமும் இன்றி சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று தீர்க்கக்கூடிய காவல் ஆய்வாளர் கருணாகரன் அறந்தாங்கி பகுதிக்கு அமைந்திருப்பது வரவேற்கக் கூடிய என சமூக ஆர்வலர்கள் கூறிகின்றனர்.

    No comments