• Breaking News

    திருவள்ளூர்: பன்பாக்கம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி.வட்டம்  பன்பாக்கம்  கிராமம் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர்ஆலயம்   புனரமைப்பு பணிகள்   பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து     கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.

    இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர  சிலைக்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

    இதனையடுத்து அங்கு கூடியிருந்த   பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.   விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் அவைத் தலைவர்.மு. க .சேகர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உறுப்பினர் கருணாகரன்.. நாகேந்திரன் ஆலஷ்ட்ராஜ் உதயன் சதீஷ். மற்றும்.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகிகள் ஏழுமலை ராதா நிகழ்ச்சி ஏற்பாடு.  செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments