• Breaking News

    அறந்தாங்கி அருகே கோவில் திருவிழாவில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மண்டகப்படி வழங்கி ஐகோர்ட் உத்தரவு


    அறந்தாங்கி அருகே இடையான்கோட்டை  காமாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் மேல்மங்கலம் வடக்கு ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 11 நாள் மண்டகப்படி வழங்கி அதில் உற்சவ வீதி உலாவோடு நடைபெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் அறந்தாங்கி தாசில்தார் முன்னிலையில்   11-ம் நாள் திருவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மேல்மங்கலம் வடக்கு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அப்பகுதியில் உள்ள இடையன்கோட்டை காமாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மண்டகப்படி வழங்குவதில் தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது.

    இதனால் மேல்மங்களம் வடக்கு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் மெய்யப்பன் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில்   பத்து நாள் நடைபெறக்கூடிய திருவிழாவில் 11 நாளாக மாற்றி அனைத்து மண்டகப்படி தாரர்களுக்கும்  என்ன விதிமுறையோ அதை அனைத்தையும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கி  திருவிழா நடைபெற வேண்டும். அதை அறந்தாங்கி தாசில்தார் பார்வையிட வேண்டும்  என  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன் அடிப்படையில் வியாழக்கிழமை 11-ஆம் நாள் ஆதிதிராவிட மண்டகப்படியில் சுவாமி உற்சவ வீதி உலாவும்,  கலை நிகழ்ச்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் நாகுடி காவல் துணை ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வையில்  நடைபெற்றது. 

    பல போராட்டங்களுக்கு பிறகு ஆதிதிராவிட சமூகத்தினர் மண்டகப்படி செய்வதால்  வெடிவெடுத்தும், கும்மியடித்தும், நடனமாடியும், உற்சவ சுவாமியை தோழில்  சுமந்து கொண்டு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இறுதியாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    No comments