நாகூரில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை
நாகூரில் செயல்படும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் பலகாரங்கள் மனிதருக்கு புற்றுநோயை உருவாக்கும் அச்சடித்த காகிதங்களில் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு வரப்பட்ட புகாரையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி இன்று ( 21.08.24 ) நாகூரில் செயல்படும் டீ மற்றும் பலகாரக் கடைகளை நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் ஆய்வு செய்தார்.
ஒருசில கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளிலும் பலகாரங்கள் கொடுக்க அச்சடித்த செய்தித்தாள்கள் பயன்படுத்துவதும் சில கடைகளில் டீ காபி பார்சல் கட்டித்தர தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதும், மூன்று கடைகள் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இல்லாமல் செயல்படுவதும் கண்டறியப்பட்டது. 10 கிலோ அளவிற்கு அச்சடித்து காகிதங்கள், 500 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டு குப்பையில் போடப்பட்டது. 12 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
பலகாரங்கள் கொடுக்க அச்சடிக்கப்படாத காகிதங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பார்சல் கொடுக்க பயன்படுத்தக்கூடாது, உணவு விற்பனை செய்யும் இடம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், உணவை கையாளும் நபர்கள் தன் சுத்தம் பேண வேண்டும், பலகாரங்கள் ஈ மொய்க்காமலும், தூசிகள் படாமலும் பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது. மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.
உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற உணவு பாதுகாப்புத்துறை மாநில ஆணையரின் வாட்ஸ்அப் புகார் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார்தாரர் பற்றிய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். என பரிந்துரைத்துள்ளார்.
மக்கள் நேரம் இணையதள பேப்பர்
எடிட்டர் ஜீ. சக்கரவர்த்தி
நாகை மாவட்ட நிருபர் ஜீ. சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments