நாகையில் புகைப்பட கலைஞர்கள் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் புகைப்பட தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்
நாகை மாவட்ட த்தில் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு மற்றும் 2024 _ 26 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் 185 வது உலக புகைப்பட தின விழா சிறப்பாக நாகப்பட்டினம் விஸ்வேஸ்வரா மஹாலில் மாவட்ட தலைவர் ஜீ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நாகை நகர தலைவர் எஸ்.முருகானந்தம் மற்றும் மாநில சங்கத்தின் 6_ஆம் மண்டல செயலாளர் எஸ்.குமார் முன்னிலை வகித்தனர் பொதுக்குழுவில் செயலாளார் அறிக்கை மற்றும் பொருளாதார அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது மூத்த புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மூத்த புகைப்பட கலைஞர்கள் கரங்களால் 185 ஆவது உலக புகைப்பட தின விழா கேக்கினை வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும் மாநில சங்கத்தின் அடையாள அட்டையை மாநில சங்க நிர்வாகி எஸ். குமார் அவர்களின் கரங்களால் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இப்பொதுக்குழுவில் போட்டியின்றி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு 2024 _ 26 ஆண்டுகாண புதிய மாவட்ட நிர்வாகிகளாக நாகை மாவட்ட தலைவர் நாகை G.சரவணன் மாவட்ட செயலாளராக சிக்கல் பீ.செல்வகுமார் பொருளாளராக வேளாங்கண்ணி எஸ். விஜயகுமார் அமைப்பாளராக நாகை வீ.ஆர்.கார்த்தி துணைத் தலைவராக கீழ்வேளூர் பீ.கே.ராமகிருஷ்ணன் இணைச் செயலாளர்களாக தலைஞாயிறு வீ.மாதவன் வேளாங்கண்ணி ஆர். பாலமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரையும் மாநில சங்கத்தின் 6_ ஆம் மண்டல செயலாளர் எஸ்.குமார் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வாழ்த்துகளை கூறினார் நன்றியுரை மாவட்ட துணை தலைவர் பீ.கே. ராமகிருஷ்ணன் வழங்கி விழாவை இனிதே நிறைவு செய்தார்
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர் ஜீ. சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments