தஞ்சை: புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்ஐயை ஆயுதப்படைக்கு பந்தாடிய எஸ்பி - MAKKAL NERAM

Breaking

Sunday, August 18, 2024

தஞ்சை: புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்ஐயை ஆயுதப்படைக்கு பந்தாடிய எஸ்பி


 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை வாங்க மறுத்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாப்பா நாடு பகுதியில் கடந்த 12-ம் தேதி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கைக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா புகாரை பெறவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment