கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது .வழுதலம்பேடு அருள்மிகு ஸ்ரீ அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த மே ஒன்றாம் தேதி பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது.அதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை ,முதல் கால வாஸ்து சாந்தி, பிரவேச பலி ,முர்சிர்திகரணம், வேதிகை பூஜை , பூர்ணாஹூதி,தீபாரதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வியாழக்கிழமை இரண்டாம் காலையாக பூஜை, ஸ்திவாசம் பூர்ணாஹூதி, தீபாராதனை, மூன்றாம் காலை யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ,நாடி சந்தனம், ராகங்கள், தாளங்கள், பூர்ணாஹூதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது .இதனை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, கலச பூஜை மகாபூர்ணாஹூதி, யாத்திராதானம், கலச புறப்பாடு நடைபெற்றது.
பின் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், அம்மனுக்கு மாங்கல்ய தாரணம், தீபாரதனை நடைபெற்றதோடு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் வழுதலம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சின்ன வழுதலம்பேடு கிராம நிர்வாகிகள் டி.எட்டியப்ப ரெட்டியார், பி.ரகுநாதன் ரெட்டியார், எஸ்.முருகன் ரெட்டியார் , பெரிய வழுதலம்பேடு கிராம நிர்வாகிகள் எம்.முனுசாமி ரெட்டியார், பி.தேவராஜ் ரெட்டியார் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க பக்தர்கள் புடை சூழ எட்டியம்மன் திருவீதி உலா நடைபெற்றது .
No comments:
Post a Comment