எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் காவல்துறை சட்டப்படி விசாரணை செய்ய வேண்டும்..... ஈரோடு நீதிமன்ற வாளகத்தில் மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பேட்டி.....
ஈரோடு மாவட்டம் , கொடுமுடியில் முருகேசன் என்பவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் துரைராஜ் என்பவர் ஜாமீன் கேட்ட வழக்கு விசாரணை இன்று 30- 8- 2024 ஈரோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இறந்து போன முருகேசனுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் சட்ட போராளி ப.பா மோகன் ஆஜரானார்.
அதன் பிறகு செய்தியாளரை சந்தித்த ப.பா மோகன் ஈரோடு மாவட்டத்தில் எஸ்.சி எஸ். டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் காவல்துறை சட்டப்படி விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டுமென பேட்டி அளித்தார்.
மூத்த வழக்கறிஞர்கள் பாவேந்தன் , பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் எஸ் கே சென்னியப்பன் மற்றும் வழக்கறிஞர் கொடுமுடி அர்ஜுனன் , சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் , மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் வி .எஸ். சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி பழனிச்சாமி, பசுபதியார் பாதுகாப்பு படை மாவட்ட செயலாளர் அப்பாஸ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பூபதி , மாவட்ட பொருளாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .
No comments