சத்தியமங்கலம்: குத்தியாலத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  குத்தியாலத்தூர்   ஊராட்சி  தொன் போஸ்கோ விடுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் ,  சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ  தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வாகப்(வ.ஊ),  வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி (கி.ஊ), சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ. தேவராஜ் ,  ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி , முத்துச்சாமி மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் ,  பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சேகர் , நஞ்சுராஜ்,  கோவிந்தராஜ் ,  வேலுமணி , சின்ராஜ் வெற்றிவேல் , மகேஷ் டி .கே .காளியப்பன்,  குருசாமி , சடையப்பன் சிக்கையன் , தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன்,  இளைஞர் அணி அமைப்பாளர்  சந்தோஷ்குமார் மற்றும்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments