• Breaking News

    மின்சார ரயில் மீது கல்வீச்சு.... பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் அடாவடி

     

    சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    இதனையடுத்து, மாம்பலம் ரயில்வே போலீசார் மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே அவர்கள் விடுவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். திடீரென கற்களை வீசி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments