ஓய்வு பெற்ற பிறகும் பதவி..... தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமனம் - MAKKAL NERAM

Breaking

Sunday, August 18, 2024

ஓய்வு பெற்ற பிறகும் பதவி..... தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமனம்

 


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 

1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக போலீஸ்துறையில் காலடி எடுத்து வைத்த சுனில்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., டி.ஜி.பி.யாக பணியாற்றி இருக்கிறார்.

 தற்போது ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment