மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ அசோசியேசன் தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார்.
மருத்துவக் கழக கிழக்கு மண்டல மாநில துணைத்தலைவர் டாக்டர் வீரபாண்டியன்,டாக்டர் சரத் சந்திரன் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது இந்திய அரசு மாநில அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.கொல்கத்தாவில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டியும், இந்த சேவை மருத்துவர் மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இறந்த மருத்துவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பணிபுரியும் மருத்துவர்ளுக்கு பாதுகாப்பு வளையங்களாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments