குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலம் அமைந்துள்ளது.இத்திருத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்கு வார கால சிறப்பு பரிகார பூஜைகளும் திருவிழாவும் நடைபெற்று வருவது வழக்கம் இந்த ஆண்டிற்கான ஆடி திருவிழா தொடங்கப்பட்டு நான்கு வாரம் முடிந்து திங்கட்கிழமை இரவு சோன கருப்பண்ணசாமிக்கு பக்தர்களால் காணிக்கையாக கொடுக்கும் மது பாட்டில்கள் மற்றும் ஆடு, கோழி, போன்றவற்றை படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக சோன கருப்பண்ணசாமிக்கு மலர் அலங்காரமும் சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட ஆடு, கோழி, போன்றவற்றை சமைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments