பொதிகை அறக்கட்டளை சார்பில் போட்டித்தேர்வு மையம்..... காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புண்ணையாபுரத்தில் பொதிகை அறக்கட்டளையின் சார்பாக பொதிகை போட்டி தேர்வு மையத்தை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் திறந்து வைத்தார். பொதிகை அறக்கட்டளையின் சார்பாக மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பில் டிஜிபி வன்னிய பெருமாள் தலைமை தாங்கி வழி நடத்தினார். பொதிகை அறக்கட்டளையின் சார்பில் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
டிஜிபி வன்னிய பெருமாள் அவர்கள்மாணவர்கள் தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சியை பற்றிய விளக்கம் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ்,டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வது எப்படி, போட்டி தேர்வுகளை அணுகுவது எப்படி,என்பதை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் போட்டி தேர்வுகளை அணுகுவது எப்படி என்பதை பற்றி விரிவாக பேசினார். காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பற்றி சென்னையை சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீமா ராஜ் தெளிவாக எடுத்துரைத்தார். சார்பதிவாளர் ரம்யா ஐஏஎஸ்,ஐபிஎஸ் ,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தயார் படுத்தி கொள்வது எப்படி என்பதை விரிவாக எடுத்து பேசினார். திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த் போட்டித் தேர்வின் சூட்சுமங்கள் பற்றி விரிவாக பேசினார்.
திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த் அவர்கள்இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருமலை நம்பி பாரதி ஐஏஎஸ் அகாடமி தினகரன்,எஸ்பிஐ வங்கி சங்கரன்கோவில், மனோகரன் மருதம் பயிற்சி மையம், வழக்கறிஞர் சிவகுமார்,ஆசிரியர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிவகுமார், ராஜசேகரன், நாகராஜன், விவேகானந்தர் சேவை அறக்கட்டளை நிறுவனர் வே.நாகராஜன் ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் உதவி அறக்கட்டளையின் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments