தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் மாவட்டங்கள் - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் மாவட்டங்கள்

 

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment