நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய எம்பி கனிமொழி - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய எம்பி கனிமொழி

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.

அவர் தற்போது நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளார். அதாவது அவரிடம் தொகுப்பாளர்கள் நடிகர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், கடின உழைப்பு மற்றும் பாதை குறித்து தெளிவாக தெரிந்ததால்தான் நடிகர் விஜய் என்று அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கிறார்.இதே தெளிவோடும் கடின உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று கூறினார். 

இதேபோன்று பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு எங்களுக்கும் பிரதமரை பாராட்ட வேண்டும் என்று ஆசைதான். அவர் எங்களுக்கு நிதி கொடுத்தால் நிச்சயம் நாங்கள் அவரை பாராட்டுவோம் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் அவரைப் புகழ்ந்து எம்பி கனிமொழி பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment