சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது புதிய ராக்கெட்
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று, காலை 9.17 மணிக்கு, புவி கண்காணிப்புக்கான இ.ஒ.எஸ்.,-08 செயற்கைகோளுடன் எஸ்.எஸ்.எல்.வி., -3 ராக்கெட், இஸ்ரோ சார்பில், விண்ணில் ஏவப்படுகிறது. அதன் சிறம்பம்சம் பின்வருமாறு:
* இ.ஒ.எஸ்.,- 08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. '
* குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே.
* விண்கலத்தில் இடம்பெற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.
* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.
No comments