புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை மற்றும் புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம் ஞாயிற்றுக்கிழமையன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லாதலைமை வகித்தார். கிளை தலைவர் முகமது இஸ்மாயில், செயலாளர் முகமது அலி, பொருளாளர் முகமது ஆசிக், துணைத் தலைவர் பைசல், துணை செயலாளர் முகமது அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
மருத்துவ தகுதி அடிப்படையில் 24 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் மருத்துவர் சரவணன் சான்றிதழ்களை வழங்கினார்.மேலும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார்.அவர் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த இரத்த வங்கி மேலாளர், மருத்துவர் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும் கிளை நிர்வாகத்திற்க்கு நன்றியினைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment