1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மரணம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 4, 2024

1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மரணம்

 

உலகில் மிக பிரபல கார் நிறுவனங்களில் ஆடி கார் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(62) ஆவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர் இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சிறிது தூரத்தில் உள்ள அடமெல்லோ மலையில் அமைந்துள்ள சிம்லா பயேர் சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டார்.

அப்போது கேபிள்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் திடீரென்று எதிர்பாராத விதமாக 10,000 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இந்நிலையில் அவருடன் சென்ற மற்றொரு மலையற்ற வீரர் உடனே மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ஹெலிகாப்டரில் வந்த மீட்பு குழுவினர் 700 அடி பள்ளத்தாக்கில் இருந்து அவரது உடல் மீட்டனர். பின்பு அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment