சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர் ரவுடிகள் . ஏ பிளஸ் மற்றும் ஏ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.மேலும் 32 கொலை, கொலை முயற்சி செய்யும் குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment