தமிழக வெற்றிக் கழக மாநாடு.... முக்கிய அறிவிப்பு நாளை காலை 11.17க்கு வெளியாகிறது - MAKKAL NERAM

Breaking

Saturday, September 7, 2024

தமிழக வெற்றிக் கழக மாநாடு.... முக்கிய அறிவிப்பு நாளை காலை 11.17க்கு வெளியாகிறது

 


தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.

இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று பதிலளித்தது.

ஓரிரு நாளில் போலீசார் பதிலளிப்பதாக தவெக நிர்வாகி புஸ்சி ஆனந்த் கூறினார். இந்த நிலையில், தவெக மாநாடு நடைபெறும் தேதியை நாளை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நளை காலை 11.17 மணிக்கு விஜய் அறிவிக்க இருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment