விபச்சார தொழில் வருமானம் மூலம் பிரியாணி கடை திறப்பு..... 15 பெண்கள் மீட்பு
தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா(41) மற்றும் ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(30) ஆகிய 2 பேரும் வாட்ஸ் ஆப்பில் குழு துவங்கி வெளிநாட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கைது செய்தனர். அதோடு 15 பெண்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து துணை கமிஷனர் கூறியதாவது, இவர்கள் 2 பேரும் வெளிநாட்டு பெண்களை அடையாளம் கண்டு விபச்சார தொழிலில் ஈடுபடுத்த வாட்ஸ் ஆப்பில் “ஆல் இந்தியா ஏஜென்ட்” என்ற பெயரில் குழு தொடங்கியுள்ளனர். அதோடு மேலும் 7 பேரை தேடி வருவதாகவும் கூறினார்.
இந்த விபச்சார தொழில் தலைவராக டெல்லியைச் சேர்ந்த கபீர்சிங் என்பவர் 117 ஏஜெண்டுகள் வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளனர். இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டு பெண்களை இந்த விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 10 சிம் கார்டுகள், 16 மொபைல் போன், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிக்கந்தர் பாதுஷா மீது கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருபவர்களை பிடிக்க 17 பேர் கொண்ட 4 தனி படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கந்தர் பாதுஷா விபச்சாரத்தில் கிடைத்த லாப பணத்தை வைத்து பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
No comments