இந்த முறையாவது கனவு பலிக்குமா...? செப்.28-ல் துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்...? - MAKKAL NERAM

Breaking

Saturday, September 21, 2024

இந்த முறையாவது கனவு பலிக்குமா...? செப்.28-ல் துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்...?

 

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் துணை முதல்வராக போகிறார் என்று கடந்த 3 மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதனை திமுக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் உறுதிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் த.மோ. அன்பரசன் இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறினார். இதேபோன்று பிற அமைச்சர்களும் விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள்.

இது பற்றி உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது முதல்வர் தான் அது பற்றி முடிவு எடுப்பார் எனவும், தனக்கு துணை முதல்வர் பதவி என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் திமுகவின் 75 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் வருகிற 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பவள விழா நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment