அறந்தாங்கி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசர்குளம் கீழ்பாதி பகுதியில்   அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனி பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு விற்பனையில் ஈடுபட்ட சேக் முகமது (40),செந்தில்குமார் (52),துரைமுருகன் (47),சுரேஷ் (40) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நான்கு கைப்பேசிகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 4300 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றி நாகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



Post a Comment

0 Comments