தமிழக மீனவர்களுக்கு ‌ரூ.5 கோடி அபராதம்.... இலங்கை நீதிமன்றம் உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 4, 2024

தமிழக மீனவர்களுக்கு ‌ரூ.5 கோடி அபராதம்.... இலங்கை நீதிமன்றம் உத்தரவு

 


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி மீன்வளங்களை அழிக்க முயன்றதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மீனவர்களுக்கு ரூ‌.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா இந்திய மதிப்பில் சுமார் 42 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எஞ்சிய 10 மீனவர்களுக்கு நீதிமன்ற காவலை நீடித்தும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment